அ.தி.மு.க.வினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்


அ.தி.மு.க.வினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
x

அ.தி.மு.க.வினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

கரூர்

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையொட்டி கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். கரூர் மாவட்ட அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் இருந்து கரூர் பஸ்நிலையம் அருகே உள்ள மனோகரா கார்னர் பகுதிக்கு அ.தி.மு.க.வினர் ஊர்வலகமாக வந்தனர். தொடர்ந்து பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கரூர் சட்டமன்ற தொகுதி பொதுக்குழு உறுப்பினர் சிவசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் தானேஷ் என்கிற முத்துக்குமார், ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன், கரூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பாலமுருகன், பகுதி செயலாளர் வி.சி.கே. ஜெயராஜ், கே.சி.எஸ்.விவேகானந்தன், நெடுஞ்செழியன் உள்பட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட அ.தி.மு.க. சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் தோகைமலை பஸ் நிலையத்தில் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தோகைமலை ஒன்றியக்குழு தலைவர் லதா ரெங்கசாமி தலைமையில், ஒன்றிய துணைச் செயலாளர் துரை கவுண்டர் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். தொடர்ந்து பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டன. பின்னர் ஒவ்வொரு கிளை கழகத்திலும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.


Next Story