பழ வியாபாரியிடம் கத்தியை காட்டி பணம் பறித்த பழைய குற்றவாளி கைது


பழ வியாபாரியிடம் கத்தியை காட்டி பணம் பறித்த பழைய குற்றவாளி கைது
x

ஆரணியில் பழ வியாபாரியிடம் கத்தியை காட்டி பணம் பறித்த பழைய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணியை அடுத்த மலையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன் (வயது 27). இவர் மினிவேனில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இன்று பகலில் ஆரணி கோட்டை மைதானம் அருகே அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பாக வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது ஆரணிப்பாளையம் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்த பூவரசன் (22) என்பவர் அங்கு வந்து பழங்களை வாங்கினாா். அதற்கு பூபாலன் பணம் கேட்டதற்கு என்னிடமே பணம் கேட்கிறாயா நான் யார் தெரியுமா என்று கூறி கத்தியை காட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும் அவரிடம் வியாபாரம் செய்து வைத்திருந்த ரூ.5 ஆயிரத்து 200 பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து பூபாலன் ஆரணி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்ேபரில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூவரசனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பூவரசன் ஏற்கனவே பலமுறை சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story