அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தாந்தோணி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தாந்தோணி வட்டார தலைவர் செல்வி தலைமை தாங்கினார். இதில் அங்கன்வாடி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

10 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் அங்கன்வாடி மையங்களை சிறிய அங்கன்வாடி மையங்களாக ஆக்குவதையும், 5 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் சிறிய அங்கன்வாடி மையங்களை பிரதான மையங்களோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், கூடுதல் பொறுப்பாக 2 அல்லது 3 அங்கன்வாடி மையங்களை அங்கன்வாடி மேற்பார்வையாளர் பார்ப்பதால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே அதனை சரி செய்ய வேண்டும், அங்கன்வாடி மைய ஊழியர்களின் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,

பதவி உயர்வு வேண்டும்

பல்வேறு மாவட்டங்களில் சிறிய அங்கன்வாடி மைய ஊழியர்களுக்கு எந்த விதமான நிபந்தனையும் இன்றி பதவி உயர்வு வழங்க வேண்டும், 10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி பதவி உயர்வு வழங்க வேண்டும், அங்கன்வாடி மையங்களில் மின் கட்டணத்தை அரசே கட்ட வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு பணம் வழங்க வேண்டும், பணியில் இருக்கும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு கடன் வழங்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஓராண்டு வழங்குவது போல் அங்கன்வாடி ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்ததாக அங்கன்வாடி ஊழியர்கள் தெரிவித்தனர்.


Next Story