மனைவியுடன் தகராறு: வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை
சென்னை பெரம்பூர் தீட்டித்தோட்டம் முதல் தெருவைச் சேர்ந்தவர் முகமது இம்ரான் (வயது 32). இவர், புரசைவாக்கத்தில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு 8 வருடங்களுக்கு முன்பு அனிஷா என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு 7 வயதில் சபிதா என்ற மகள் இருக்கிறாள். கடந்த சில நாட்களாக முகமது இம்ரான், குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்தார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மதியம் வீட்டில் உள்ள அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்ட முகமது இம்ரான், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Related Tags :
Next Story