நகை திருடிய பெண் கைது


நகை திருடிய பெண் கைது
x

நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

சாயல்குடி,

விருதுநகர் மாவட்டம் பரளச்சிஅருகே உள்ள பூலாங்கால் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மனைவி லட்சுமி (வயது37). இவர் தனியார் நகை கடைக்கு சென்று நகையை அடகு வைக்க சென்றுள்ளார். அவர் மீது சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர் சாயல்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா அடகு வைக்க வந்த லட்சுமியை விசாரித்ததில் வீட்டின் உரிமையாளர் நாகரத்தினம் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமியை கைது செய்தனர்.


Next Story