தனுஷ்கோடிக்கு சென்ற ஆட்டோ கவிழ்ந்தது; சுற்றுலா பயணிகள் படுகாயம்


தனுஷ்கோடிக்கு சென்ற ஆட்டோ கவிழ்ந்தது;   சுற்றுலா பயணிகள் படுகாயம்
x
தினத்தந்தி 23 Nov 2022 12:15 AM IST (Updated: 23 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தனுஷ்கோடிக்கு சென்ற ஆட்டோ கவிழ்ந்தது. இதில் 5 சுற்றுலா பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

ராமநாதபுரம்

தனுஷ்கோடி,

தனுஷ்கோடிக்கு சென்ற ஆட்டோ கவிழ்ந்தது. இதில் 5 சுற்றுலா பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

ஆட்டோ கவிழ்ந்தது

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் 13 பேர் வந்திருந்தனர். பின்னர் இவர்கள் 13 பேரும் ஆட்டோ ஒன்றில் தனுஷ்கோடி சென்றுள்ளனர்.

இந்த ஆட்டோவை ராமேசுவரம் என்.எஸ்.கே வீதியை சேர்ந்த சரவணன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். புது ரோடு பகுதியை தாண்டி தனுஷ்கோடி ஜடாதீர்த்த சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

5 பேர் படுகாயம்

இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் சரவணன் மற்றும் ஆட்டோவில் இருந்த நாகேஸ்வரராவ் (வயது 55), நாகராஜு (40) ஏடு கொண்டலு, தனக்குமார் ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.

காயமடைந்த 5 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த விபத்து குறித்து தனுஷ்கோடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அளவுக்கு அதிகமான பயணிகளை ஆட்டோவில் ஏற்றி சென்றதால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது.


Related Tags :
Next Story