பா.ஜனதா கொடியேற்று விழா
பா.ஜனதா கொடியேற்று விழா நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூரில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் விழாவையொட்டி கொடியேற்று விழா மற்றும் மாற்றுக் கட்சியினர் பா.ஜனதாவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் சித்ராமுத்துக்குமார் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் கோவிசேதுராமன், ஒன்றிய தலைவர் சுரேஷ்குமார், ஒன்றிய துணைத் தலைவர் குருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் ஜெயவர்தன் வரவேற்றார். இதில் மாவட்ட தலைவர் அகோரம் கலந்து கொண்டு தேரழுந்தூர், பெருமாள் கோவில், மேலையூர், தொழுதாலங்குடி உள்ளிட்ட ஊராட்சிகளில் பா.ஜனதா கொடி ஏற்றினார். அப்போது மாற்றுக்கட்சியினர் பா.ஜனதாவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் ஒன்றிய மகளிரணி தலைவி அனிதா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் சசிகலா, மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் ஹேமலதா, மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் ருக்மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் மகாகவி சந்திரசேகர் நன்றி கூறினார்.