கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பரிதாப சாவு


கார்-மோட்டார் சைக்கிள் மோதல்;   2 பேர் பரிதாப சாவு
x
தினத்தந்தி 25 Dec 2022 12:15 AM IST (Updated: 25 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு புத்தாடை எடுக்க சென்ற போது கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் பரிதாபமாக இறந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

ராமநாதபுரம்

கீழக்கரை,

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு புத்தாடை எடுக்க சென்ற போது கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் பரிதாபமாக இறந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

கார் மோதியது

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பனையங்கால் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளிகள் 3 பேர் மோட்டார் சைக்கிளில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு புத்தாடை வாங்க கீழக்கரையில் இருந்து ராமநாதபுரத்திற்கு வந்தனர். திருப்புல்லாணி அருகே உள்ள தோணிப்பாலம் அருகே வந்த போது கர்நாடகாவை சேர்ந்த கார் மோட்டார் சைக்கிளில் மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

2 பேர் சாவு

இந்த விபத்தில் ேமாட்டார் சைக்கிளில் சென்ற தனிக்கோடி (வயது 24) அருண் (26) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் படுகாயமடைந்த மதன் (19) என்பவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக புத்தாடைகள் எடுக்க சென்ற போது விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story