சாமுண்டீஸ்வரி கோவிலில் சண்டி ஹோமம்


சாமுண்டீஸ்வரி கோவிலில் சண்டி ஹோமம்
x
தினத்தந்தி 20 Feb 2023 6:48 PM GMT (Updated: 20 Feb 2023 7:35 PM GMT)

சாமுண்டீஸ்வரி கோவிலில் சண்டி ஹோமம் நடந்தது.

அரியலூர்

தாமரைக்குளம்:

அரியலூர் மாவட்டம், பொய்யாதநல்லூர் கிராமத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவிக்கு சண்டி ஹோமம் நடைபெற்றது. யாகத்தில் பக்தர்கள் வேண்டுதலின்பேரில் சேலைகள் இடப்பட்டன. மேலும் மூலிகைகள், பழங்கள் போடப்பட்டன. இதைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.


Next Story