33 படகுகளுக்கு நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு


33 படகுகளுக்கு நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
x
தினத்தந்தி 23 Aug 2023 9:22 AM GMT (Updated: 23 Aug 2023 10:42 AM GMT)

33 படகுகளுக்கு நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மீனவர் நலனில் அக்கறை கொண்டுள்ள இந்த அரசானது, இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளுக்கு நிவாரணம் வழங்குவதில் விடுபட்டு போன 21 விசைப் படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5,00,000/- மற்றும் 12 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,50,000/- ஆக மொத்தம் 33 படகுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1.23 கோடி முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கி அரசாணை (ப)எண். 523, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்(மீன்6)துறை, நாள் 14.08.2023-ல் ஆணைகள் வெளியிடப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.


Next Story