மொபட் ஓட்டிச்சென்ற 9-ம் வகுப்பு மாணவன், டிராக்டர் மோதி பலி


மொபட் ஓட்டிச்சென்ற 9-ம் வகுப்பு மாணவன், டிராக்டர் மோதி பலி
x
தினத்தந்தி 21 Feb 2023 6:45 PM GMT (Updated: 21 Feb 2023 6:46 PM GMT)

பள்ளி முடிந்து வீடு திரும்பிய போது மொபட் ஓட்டிய 9-ம் வகுப்பு மாணவன் டிராக்டர் மோதி பலியானான். உடன் சென்ற அவனுடைய தம்பி படுகாயம் அடைந்தான்.

ராமநாதபுரம்

சாயல்குடி,

பள்ளி முடிந்து வீடு திரும்பிய போது மொபட் ஓட்டிய 9-ம் வகுப்பு மாணவன் டிராக்டர் மோதி பலியானான். உடன் சென்ற அவனுடைய தம்பி படுகாயம் அடைந்தான்.

டிராக்டர் மோதி மாணவர் சாவு

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவருக்கு 2 மகன்கள். மூத்த மகனுக்கு 14 வயது. 2-வது மகனுக்கு 12 வயது. இருவரும் அருகில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தனர். இதில் மூத்த மகன் 9-ம் வகுப்பும், 2-வது மகன் 6-ம் வகுப்பும் படித்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்தவுடன் ெமாபட்டில் இருவரும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த டிராக்டர், பள்ளி மாணவர்கள் வந்த மொபட் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திேலயே மொபட்டை ஓட்டி வந்த 14 வயது மாணவன் பலியானான். அவனுடைய தம்பி படுகாயம் அடைந்தான். உடனே அக்கம், பக்கத்தினர் விரைந்து சென்று காயம் அடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக கடலாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டு உள்ளான்.

டிரைவர் கைது

இது குறித்து தகவல் அறிந்ததும் கடலாடி இன்ஸ்பெக்டர் ஜான்சி ராணி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பலியான மாணவன் உடலை மீட்டு கடலாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய டிராக்டர் டிரைவர் மேலச்செல்வனூர் கிராமத்தைச் சேர்ந்த பால்பாண்டி(45) என்பவரை கடலாடி போலீசார் கைது செய்தனர். பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது டிராக்டர் மோதி பள்ளி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

------------


Related Tags :
Next Story