கடைகளில் பயன்படுத்தியதால் வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல்


கடைகளில் பயன்படுத்தியதால் வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல்
x

கடைகளில் பயன்படுத்தினால் வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சேலம்

சேலம்:-

சேலம் மாவட்ட உணவு வழங்கல் அலுவலக பறக்கும் படை தனி தாசில்தார் ராஜேஷ்குமார் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் சங்கர்கணேஷ், குமார், பால்ராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் கொண்டலாம்பட்டி, நெத்திமேடு, அன்னதானப்பட்டி, டவுன் ரெயில் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள டீக்கடை, ஓட்டல்களில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது வீடுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும், கியாஸ் சிலிண்டர்கள் வியாபார நோக்கில் ஓட்டல், டீக்கடைகளில் பயன்படுத்தப்பட்டு வருவது தெரிந்தது. இதையடுத்து 9 கியாஸ் சிலிண்டர்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.


Next Story