சந்திரயான்-3 வெற்றி - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து


சந்திரயான்-3 வெற்றி - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
x

சந்திரயான்-3 வெற்றியை இந்தியா முழுவதும் உள்ள மக்கள், மாணவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

புதுடெல்லி,

இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 - விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டபடி இன்று மாலை 06:04 மணிக்கு துல்லியமாக தரையிறங்கியது. இதன் மூலம் விண்வெளித் துறையில் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை பெற்று அசத்தி இருக்கிறது. இந்த வெற்றியை இந்தியா முழுவதும் உள்ள மக்கள், மாணவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், சந்திரயான் 3 வெற்றிக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில்,

நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையையும், மகிழ்ச்சியையும் உணர்கிறேன்.

இஸ்ரோவுக்கு வாழ்த்துகள் . இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத், விழுப்புரத்தைச் சேர்ந்த திட்ட இயக்குநர் .பி.வீரமுத்துவேல் அவர்களுக்கும், குறிப்பாக சந்திராயன் இயக்கத்தின் முன்னோடியான முன்னாள் இஸ்ரோ தலைவர் .கே.சிவனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.பிரதமர் மோடிக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். என தெரிவித்துள்ளார்.


Next Story