கொங்கணாபுரத்தில் ரூ.85 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
கொங்கணாபுரத்தில் ரூ.85 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.
சேலம்
எடப்பாடி:
கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்த சுமார் 3 ஆயிரத்து 400 பருத்தி மூட்டைகள் 750 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு, கூட்டுறவு அலுவலர்கள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் பி.டி. ரக பருத்தியானது, குவிண்டால் ஒன்றுக்கு (100 கிலோ) ரூ.7 ஆயிரத்து 219 முதல் ரூ.8 ஆயிரத்து 522 வரை விற்பனையானது. டி.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7 ஆயிரத்து 900 முதல் ரூ.8 ஆயிரத்து 419 வரை விலை போனது. கொட்டு ரக பருத்தியானது, குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரத்து 610 முதல் ரூ.5 ஆயிரத்து 825 வரையில் பருத்தி விற்பனை ஆனது.. நாள் முழுவதும் நடைபெற்ற ஏலத்தில், ரூ.85 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.
Related Tags :
Next Story