Normal
கோபால்பட்டி அருகே குளத்தில் செத்து மிதந்த மீன்கள்
கோபால்பட்டி அருகே குளத்தில் மீன்கள் செத்து கிடந்ததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.
திண்டுக்கல்
கோபால்பட்டி அருகே நத்தம் சாலையில் தி.வடுகபட்டி பிரிவில் கடைக்குளம் உள்ளது. இந்த குளத்தில் தற்போது குறைந்தளவு தண்ணீர் உள்ளது. இருப்பினும் குளத்தின் நீர் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்த முடியாமல் கருப்பு நிறமாக மாறி இருந்தது.
இந்தநிலையில் இன்று அந்த குளத்தில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதனை கண்ட அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் செத்து மிதந்த மீன்களை கையில் ஏந்தி கவலை தெரிவித்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடைக்குளத்தில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும், நச்சுக்கழிவு கலப்பதால் இந்த குளம் மாசடைந்து வருகிறது. எனவே அதனை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story