ராஜேந்திர சோழனின் உருவப்படம் வைக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்


ராஜேந்திர சோழனின் உருவப்படம் வைக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x

அரசு விழாவில் ராஜேந்திர சோழனின் உருவப்படம் வைக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினர் 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரை விழா அரசு விழாவாக நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் ராஜேந்திர சோழனின்உருவப்படம் வைக்காமல் கொண்டாடியதை கண்டித்து இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் இந்து முன்னணியினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்யப்போவதாக இந்து முன்னணியினர் தெரிவித்தனர். இதற்கு அனுமதி மறுத்த போலீசாரை கண்டித்து இந்து முன்னணியினர் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து இந்து முன்னணியினர் 26 பேரை ஜெயங்கொண்டம் போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவம் காரணமாக கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story