ஏரியில் இறங்கி புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ஏரியில் இறங்கி புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

நெல்லூர்பேட்டை ஏரிக்கரை விரிசலை சரிசெய்யக்கோரி புரட்சி பாரதம் கட்சி சார்பில் ஏரியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடந்தது.

வேலூர்

குடியாத்தம்

நெல்லூர்பேட்டை ஏரிக்கரை விரிசலை சரிசெய்யக்கோரி புரட்சி பாரதம் கட்சி சார்பில் ஏரியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஏரியில் இறங்கி ஆர்ப்பாட்டம்

குடியாத்தம் நெல்லூர்பேட்டை பெரிய ஏரி என்கிற பெருக்கி ஏரி வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாகும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த மழையில் ஏரி நிரம்பியது. அப்போது கார்த்திகேயபுரம் கிராமத்தை ஒட்டியபடி உள்ள ஏரிக்கரையில் விரிசல் ஏற்பட்டது. தண்ணீர் வெளியேறினால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் ஆகும், உயிர் பலி ஏற்படும் என்பதால் ஏரியின் ஒரு பகுதியில் கரை உடைக்கப்பட்டு ஏரியில் இருந்த பாதி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

ஓரிரு மாதங்களில் மீண்டும் மழைக்காலம் தொடங்க இருப்பதால் நெல்லூர்பேட்டை ஏரி விரைவில் நிரம்பும் நிலை உள்ளது. தற்போது நெல்லூர்பேட்டை பெரிய ஏரியின் கரையில் பல இடங்களில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக சீர் செய்ய வலியுறுத்தி வேலூர் மாவட்ட புரட்சிபாரதம் கட்சி சார்பில் ஏரியில் இறங்கி தண்ணீரில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சீரமைக்க வேண்டும்

ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் மாவட்ட செயலாளரும், நகரமன்ற உறுப்பினருமான பி.மேகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் சத்யனார், மாவட்ட பொருளாளரும் ஒன்றிய குழு உறுப்பினருமான குட்டி வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் நந்தகுமார், மாவட்ட துணை தலைவர்கள் நெப்போலியன், கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் சிட்டிபாபு, குடியாத்தம் நகர செயலாளர் ரமேஷ், வடக்கு ஒன்றிய செயலாளர் ஆனந்தராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில், கே.வி.குப்பம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ், குடியாத்தம் நகர தலைவர் சீனிவாசன், தெற்கு ஒன்றிய தலைவர் கோகுல் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

அவர்கள் ஏரியின் பாதுகாப்பற்ற நிலையை கண்டு கொள்ளாத நீர் வளத்துறையை கண்டித்தும், ஏரிக் கரையை உடனடியாக சீரமைக்கவேண்டும், ஏரியை உடனடியாக தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும், ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

பினனர் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் கோபியிடம் ஏரிக் கரையை சீரமைக்க வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது



Related Tags :
Next Story