Normal
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்பாட்டம்
அரக்கோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை
அரக்கோணம்
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் அரக்கோணத்தில் ஒன்றிய செயலாளர் கவிராஜ் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள மத்தியஅரசு பணியிடங்களில் தமிழக இளைஞர்களுக்கு 90 சதவீதம் வழங்க வேண்டும், தமிழ்நாட்டு அரசு பணியிடங்களை தமிழக இளைஞர்களுக்கே முழுமையாக வழங்க வேண்டும், மத்திய, மாநில அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும், தற்காலிக ஒப்பந்த அவுட்சோர்சிங் முறையை தவிர்த்து பணி நியமனங்களை நிரந்தரம் ஆக்க வேண்டும், சிறு மற்றும் குறு தொழில்கள் தொடங்க இளைஞர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story