கல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்


கல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
x

கல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

கரூர் மாவட்ட உழைப்பாளி மக்கள் கட்சியின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில பொருளாளர் தேக்கமலை தலைமை தாங்கினார். மாநில செயலாளர் முருகேசன் தொடக்க உரையாற்றினார். சமூக நீதி கூட்டமைப்பு அமைப்பாளர் முருகேசன் முன்னிலை வைத்தார்.

கல் உடைக்கும் தொழிலாளர் குழு, சங்கங்களுக்கு குவாரி குத்தகை வழங்கி வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும், போயர் சமுதாய மக்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், கட்டுமான நலவாரியம் போயர் சமுதாய மக்களின் பிரதிநிதிகளுக்கு தலைவர் பதவி வழங்க வேண்டும், கல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story