நலிந்தோர் நல்வாழ்வு மாநாடு
சின்னமனூர் அருகே அறிவியல் மையத்தில் விவசாயிகளுக்கான நலிந்தோர் நல்வாழ்வு மாநாடு நடந்தது.
சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் உள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் விவசாயிகளுக்கான நலிந்தோர் நல்வாழ்வு மாநாடு நடந்தது. அறிவியல் மைய தலைவர் பச்சைமால் வரவேற்றார். அட்மா திட்ட துணை இயக்குனர் முத்துலட்சுமி கலந்துகொண்டு வேளாண் திட்டங்கள் குறித்து பேசினார். இதில், உழவர் கவுரவ நிதியின் கீழ் விவசாயிகளுக்கு 11 தவணை ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திரமோடி பேசிய நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு பிரதமரின் உரையை கேட்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் நறுமண பயிர்கள் வாரியத்தின் முதன்மை கள அலுவலர் செந்தில்குமரன், சின்னமனூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் கார்த்திக் ராஜா, காமாட்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அழகுமுத்து உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர். முடிவில் தொழில்நுட்ப வல்லுனர் ரம்யா சிவசெல்வி நன்றி கூறினார்.