தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்


தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
x

ராணி்பேட்டையில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை நகர தி.மு.க. மற்றும் மாவட்ட மாணவரணி சார்பில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் ராணிப்பேட்டை முத்துக்கடையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர பொறுப்பாளர் பூங்காவனம் தலைமை தாங்கினார். கிருஷ்ணன், அப்துல்லா, வக்கீல் ஜெயக்குமார், உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத் வரவேற்றார்.

கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்்தி, டாக்டர் செந்தில்குமார் எம்.பி., தலைமை கழக பேச்சாளர் செங்கை சந்தானம் ஆகியோர் கலந்துகொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனைகள் குறித்து, சிறப்புரை ஆற்றினார்கள்.

கூட்டத்தில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., தி.மு.க. மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் ஆர்.வினோத் காந்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் அசோகன், மாவட்ட துணை செயலாளர்கள் ஏ.கே.சுந்தரமூர்த்தி, ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் கண்ணய்யன், தலைமை செயற்குழு உறுப்பினர் சுந்தரம், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வாலாஜா ஒன்றியக் குழு தலைவர் சேஷா வெங்கட், நகர மன்ற தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நகர துணை செயலாளர் துரை குமார் நன்றி கூறினார்.

---

Image1 File Name : 10735441.jpg

----

Reporter : K. GANGADHARAN Location : Vellore - SIPCOT-RANIPET


Related Tags :
Next Story