முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை

சிவகங்கை,

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலையில் முதியவர் ஒருவர் வந்தார். அவர் கலெக்டர் அலுவலக வாசலில் வந்ததும் தன் கையில் வைத்திருந்த கேனில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் விரைந்து சென்று அவரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்தனர். பின்னர் அவரை சிவகங்கை நகர் போலீசார் பத்திரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் கணேசன் (வயது 70) என்றும் அவர் மானாமதுரையை அடுத்த மழவராயனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் என்றும் வீடு தொடர்பாக அவருடைய தம்பியுடன் பிரச்சினை இருப்பதாகவும். அதில் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தீக்குளிக்க முயன்றதும் தெரிந்தது. இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்டுத்தியது.


Next Story