விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Aug 2023 7:30 PM GMT (Updated: 11 Aug 2023 7:30 PM GMT)

விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023-ஐ திரும்பப்பெற வேண்டும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரமும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரத்து 500 வழங்க வேண்டும். தமிழ்நாட்டுக்கென தனி வேளாண் காப்பீட்டு திட்டத்தை அரசே தொடங்க வேண்டும். காவிரி, முல்லை பெரியாறு உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். மேகதாது அணை கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் ஸ்ரீதர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மாவட்ட செயலாளர் ராமதாஸ், மனிதநேய மக்கள் கட்சி தலைமை பிரதிநிதி ஜபருல்லா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story