சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x

குமராட்சி அருகே சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர்

காட்டுமன்னார்கோவில்,

சிதம்பரம் பகுதியில் இருந்து குமராட்சி வழியாக காட்டுமன்னார்கோவில், அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி வரை விளை நிலங்கள், வீட்டு மனைகள், வீடுகள் உள்ளிட்டவற்றை கையகப்படுத்தி தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் நிலம் கையகப்படுத்தப்பட்டதில் வீரநத்தம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சிலருக்கு இதுவரை இழப்பீடு தொகை வழங்கவில்லை என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று விவசாயிகள் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதுபற்றி தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார், தாசில்தார் வேணி மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story