பரங்கிப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம்


பரங்கிப்பேட்டையில்    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம்
x

பரங்கிப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூர்


பரங்கிப்பேட்டை,

பரங்கிப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் விஜய் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்.

போராட்டமானது, பரங்கிப்பேட்டை பகுதியில் மனைகள் விற்பனை செய்வதாக கூறி, பணத்தை பெற்றுக்கொண்டு மனைகளை கொடுக்காமல், பணத்தையும் திருப்பி தராமல் மக்களை ஏமாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடைபெற்றது.

இதில், மாவட்ட செயலாளர் மாதவன், ஒன்றிய தலைவர் கற்பனை செல்வம், மாவட்ட குழு வாஞ்சிநாதன், ஒன்றிய செயலாளர் ஆழ்வார், நகர செயலாளர் வேல்முருகன், பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் ஜெயந்தி ஜெய்சங்கர், அருள்முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள்.தீபன், கொளஞ்சியப்பன், அம் சாயால் ஹசன்முகமது மன்சூர், கோபிநாத், லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் ஒன்றியக்குழு பாண்டியன் நன்றி கூறினார்.


Next Story