நாகர்கோவில் மாநகராட்சி அலுவலக புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்


நாகர்கோவில் மாநகராட்சி அலுவலக புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 7 March 2023 5:03 AM GMT (Updated: 7 March 2023 5:06 AM GMT)

நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதையடுத்து புதிய அலுவலகம் கட்ட ரூ.11.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து கலைவாணர் அரங்கம் இருந்த இடத்தில் அதை இடித்து அகற்றிவிட்டு புதிய மாநகராட்சி அலுவலகம் கட்டும் பணி நடந்தது.

தற்பொழுது புதிய அலுவலக கட்டுமான பணிகள் நிறைவடைந்து உள்ளது. 2 தளங்களுடன் பிரம்மிக்கும் வகையில் மாநகராட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. கூட்ட அரங்கம் லிப்ட் வசதி உட்பட அனைத்து அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கள ஆய்வில் முதல் அமைச்சர் திட்டத்தின் கீழ் தென் மாவட்டங்களில் முதல் அமைச்சர் ஆய்வு செய்து வருகிறார். அப்போது இந்த புதிய மாநகராட்சி அலுவலக கட்டிடத்தை முதல் அமைச்சர் திறந்து வைத்தார்.

அத்துடன், கன்னியாகுமரி மாவட்ட திமுக அலுவலக வளாகத்தில் 14 அடி உயர கருணாநிதி சிலையையும் முதல் அமைச்சர் திறந்துவைத்தார். இதில் அமைச்சர்கள், மேயர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Next Story