சுங்கச்சாவடி முன்பு வைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகளால் அடிக்கடி விபத்து


சுங்கச்சாவடி முன்பு வைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகளால் அடிக்கடி விபத்து
x

அரவக்குறிச்சி அருகே சுங்கச்சாவடி முன்பு வைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகளால் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்

அடிக்கடி விபத்து

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே வேலன்செட்டியூர் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி உள்ளது. இப்பகுதியில் தெற்கு நோக்கிச் செல்ல 6 வழிகளும் வடக்கு நோக்கி செல்ல 6 வழிகளும் உள்ளன. தெற்கு நோக்கி செல்லும் வாகனங்களுக்கு எந்த தடையும் இல்லை. ஆனால் திண்டுக்கலில் இருந்து கரூர் நோக்கி செல்லும் வாகனங்கள் சுங்கச்சாவடிக்கு பணம் கட்டிவிட்டு கடக்கும்போது ஒரு வாகனம் மட்டும் செல்லும் அளவிற்கு வழிவிட்டு மற்ற பகுதிகள் அனைத்தும் இரும்பு தடுப்புகளால் வைத்து தடுக்கப்பட்டுள்ளன.

இதனால் திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி செல்லும் வாகனங்கள் 6 வழிப்பாதைகளில் செல்லும்போது சுங்கச்சாவடியை கடந்தவுடன் ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவிற்கு இடம் உள்ளது. இதனால் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளாகின்றன. இதனால் வான ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

கோரிக்கை

குறிப்பாக பயணிகளை ஏற்று செல்லும் பஸ்களும், பள்ளி, கல்லூரி வாகனங்களும் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றன. இருசக்கர வாகனங்களில் செல்வோர் இப்பகுதியில் மிகவும் பயத்துடன் செல்கின்றனர்.

இதுதொடர்பாக சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் கேட்டதற்கு நாங்கள் எதுவும் இரும்பு தடுப்புகள் வைக்கவில்லை, போலீசார் வைத்துள்ளனர் என்று கூறினார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சுங்கச்சாவடி அருகே வைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story