பூந்தமல்லி அருகே அரசு பஸ்கள் மோதல்; 11 பேர் காயம்


பூந்தமல்லி அருகே அரசு பஸ்கள் மோதல்; 11 பேர் காயம்
x

பூந்தமல்லி அருகே அரசு பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் 11 பயணிகள் காயமடைந்தனர்.

திருவள்ளூர்

பஸ் மோதி விபத்து

பூந்தமல்லியில் இருந்து திருவள்ளூர் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று சென்னை மாநகர பஸ் பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

அதேபோல் பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து வேலூர் நோக்கி தமிழ்நாடு போக்குவரத்து கழக பஸ்சும் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பாரிவாக்கம் சந்திப்பு அருகே சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த மாநகர பஸ்சின் பின்புறத்தில் வேலூர் நோக்கி சென்ற அரசு பஸ் மோதியது.

பயணிகள் காயம்

இதில் மாநகர பஸ்சின் பின்பகுதியும், வேலூருக்கு சென்ற பஸ்சின் முன்பகுதியும் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் 2 பஸ்களிலும் பயணம் செய்த டிரைவர்கள் அருள்கிருஷ்ணன் (வயது 36), லிங்கேஷ்வரன் (45) மற்றும் பயணிகள் விஜயகுமார் (25), ரமேஷ் (20) உள்பட 11 பேர் காயம் அடைந்தனர். அனைவரும் பூந்தமல்லியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள்.

இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story