மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட துணை அமைப்பாளர் செல்லமுத்து உள்ளிட்டோர் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் (100 நாள் வேலை) மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார கோரிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் நிறைவேற்றக்கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். மேலும் அவர்கள் கடந்த வாரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் மாற்றுத்திறனாளி நிர்வாகி ஒருவரை அவமரியாதை செய்து வெளியேற செய்ததாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனரை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கோஷங்களை எழுப்பினர்.


Next Story