Normal
நச்சலூர் பகுதியில் பலத்த மழை
நச்சலூர் பகுதியில் பலத்த மழை பெய்தது.
கரூர்
நச்சலூர்,
நச்சலூர் பகுதியில் காலையில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். மதியத்திற்கு பிறகு வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலை 5.30 மணியில் இருந்து 6.30 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் நச்சலூர் பகுதிக்குட்பட்ட நெய்தலூர் காலனி, நெய்தலூர், சேப்ளாப்பட்டி ஆகிய பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்ததுஇதனால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story