தொடரும் கனமழை: சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!


தொடரும் கனமழை: சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!
x

தொடர் மழை காரணமாக சென்னையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்து உள்ளார்.

சென்னை,

சென்னையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கனமழை கொட்டி வருகிறது. இன்று காலை ஓரளவு வெயில் அடித்தது. இந்த நிலையில், மாலையில் தீடீரென கனமழை கொட்டியது.

மெரினா, அடையாறு, சாந்தோம், ஜெமினி, தேனாம்பேட்டை, எழும்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி வருகிறது. புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது.

மேலும், சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், சென்னையில் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்து உள்ளார்.


Next Story