அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் 15-ந்தேதிக்குள் தயாராகும் - உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்


அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் 15-ந்தேதிக்குள் தயாராகும் - உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்
x
தினத்தந்தி 2 Dec 2023 6:39 PM IST (Updated: 2 Dec 2023 10:00 PM IST)
t-max-icont-min-icon

அயோத்தியில் பெரிய அளவில் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

லக்னோ,

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் வரும் ஜனவரி 22-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக அயோத்தியில் உள்ள விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க உத்தர பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.

அயோத்தியில் சிறிய அளவில் விமான நிலையம் இருந்து வந்த நிலையில், அங்கு தற்போது பெரிய அளவில் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யாநாத், மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா, சிவில் விமானப் போக்குவரத்துத்துறை இணை மந்திரி வி.கே.சிங் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய யோகி ஆதித்யாநாத், ''அயோத்தி விமான நிலையத்தை பெரிய அளவில் அமைப்பதற்காக மாநில அரசு 821 ஏக்கர் நிலத்தைக் கொடுத்ததைத் தொடர்ந்து, மிகப் பெரிய புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கானப் பணிகளை இந்திய விமான ஆணையரகம் மேற்கொண்டு வருகிறது. புதிய விமான நிலையம் வரும் 15-ம் தேதிக்குள் தயாராகிவிடும்'' என தெரிவித்தார்.


Next Story