'கருணாநிதியின் தொடக்க வாழ்க்கை மொழிக்கானது, நிறைவு வாழ்க்கை இனத்துக்கானது' - வைரமுத்து


கருணாநிதியின் தொடக்க வாழ்க்கை மொழிக்கானது, நிறைவு வாழ்க்கை இனத்துக்கானது - வைரமுத்து
x

கலைஞர் கருணாநிதியின் தொடக்க வாழ்க்கை மொழிக்கானது என்றும், அவரது நிறைவு வாழ்க்கை இனத்துக்கானது என்றும் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், "காலம் உள்ளவரை கலைஞர்" என்ற நவீன கண்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் தங்கம் தென்னரசு, தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்க பாண்டியன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் வைரமுத்து பேசியதாவது;-

"கலைஞர் கருணாநிதியின் தொடக்க வாழ்க்கை மொழிக்கானது, நிறைவு வாழ்க்கை இனத்துக்கானது. மொழி, இனம் என்ற இரு கரைகளுக்கு நடுவே பிரவாகம் எடுத்து ஓடிய நதி அவர். அந்த வாழ்க்கை இந்த கண்காட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அரசியல், தமிழ்நாட்டின் போராட்டங்கள், தமிழ்நாட்டின் கல்வி, கட்டமைப்பு, சீர்திருத்தம் எல்லாவற்றையும் உள்ளடக்கியதோடு மட்டுமல்லாமல், கருணாநிதி எத்தனை பெரிய இலக்கியவாதி என்பதற்கான சாட்சிகளும் இந்த கண்காட்சியில் கொட்டிக் கிடக்கின்றன."

இவ்வாறு வைரமுத்து தெரிவித்தார்.



Next Story