சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 முதியவர்களுக்கு ஆயுள் தண்டனை


சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 முதியவர்களுக்கு ஆயுள் தண்டனை
x

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 முதியவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

புதுக்கோட்டை

பாலியல் வன்கொடுமை

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை பெரியப்பா முறை கொண்ட 63 வயது முதியவரும், தாத்தா முறை கொண்ட 69 வயது முதியவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 17-ந் தேதி கொடுத்த புகாரின் பேரில் அறந்தாங்கி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2 முதியவர்களையும் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு கூறினார். இதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 63 வயதுடைய முதியவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2½ லட்சம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறையும், சிறுமியை மிரட்டிய குற்றத்திற்காக 2 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்தார். 69 வயதுடைய முதியவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2½ லட்சம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்தார். அபராத தொகையான ரூ.5½ லட்சத்தை சிறுமிக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், அரசு சார்பில் சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார்.


Next Story