பெரம்பலூரில் இலக்கிய பேச்சரங்கம்


பெரம்பலூரில் இலக்கிய பேச்சரங்கம்
x

பெரம்பலூரில் இலக்கிய பேச்சரங்கம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் பதியம் இலக்கிய சங்கமம் சார்பில் ஆனந்த யாழ் என்னும் தலைப்பில் 'பேச்சரங்கம்' இணைய வழியாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரியலூர் அரசு கலைக்கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் தமிழ்மாறன் தலைமை தாங்கி பேசினார். பரிதி யாழ் கவிதை நூலின் ஆசிரியர் கவிஞர் நிழலி முன்னிலை வகித்தார். சேலம் நிறைகோல் தமிழ் சங்கத்தின் தலைவர் இளவரசி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில், யாழ் மனதை மயக்கும் ஓர் இசைக்கருவி. சிறிய யாழினை இசைத்தவர்கள் சிறுபாணர்கள். பெரிய யாழினை இசைத்தவர்கள் பெரும் பாணர்கள் என்று அழைக்கப்பட்டனர். நரம்பு கருவியாகிய யாழ் ஆனந்தத்தை தருகிறது. மானுட வாழ்வில் தந்தை, தாய், ஆசிரியர், நட்பு, காதல், உடன்பிறப்பு, குடும்பம், தலைவர், இலக்கியம் போன்றவை ஒருவரை மீட்டும் யாழாக விளங்குகின்றன என்று கூறினார். மறைந்த திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் ந.முத்துக்குமாரின் ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்ற பாடல் வரிகளின் வாழ்வியல் அர்த்தங்களை நினைவுகூர்ந்து பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், கல்லூரிகளை சேர்ந்த தமிழ்த்துறை மாணவர்கள் பேசினர். முன்னதாக பென்னாடம் பள்ளி தமிழாசிரியர் ராஜா வரவேற்றார். முடிவில் அரியலூர் அரசு கலைக்கல்லூரி தமிழ் முனைவர் சிவாஜி நன்றி கூறினார்.


Next Story