அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய மன்சூர் அலிகான்


அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய மன்சூர் அலிகான்
x

பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள், அ.ம.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்தநிலையில், இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் மன்சூர் அலிகான் கூட்டணி குறித்து அ.தி.மு.க.விடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்திற்கு இன்று மன்சூர் அலிகான் சென்றார்.

அங்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், பெஞ்சமின் ஆகியோரை மன்சூர் அலிகான் சந்தித்து தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இணைந்து செயல்பட பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் அ.தி.மு.க. கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என மன்சூர் அலிகான் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story