பாஜகவில் இன்னும் பல அதிரடி நடவடிக்கைகள் தொடரும் - அண்ணாமலை பேட்டி


பாஜகவில் இன்னும் பல அதிரடி நடவடிக்கைகள் தொடரும் - அண்ணாமலை பேட்டி
x
தினத்தந்தி 23 Nov 2022 6:27 AM GMT (Updated: 23 Nov 2022 6:38 AM GMT)

பாஜகவில் இன்னும் பல அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என்று பாஜக தலைவர்அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை,

சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பாஜகவின் லட்சுமண ரேகையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி. யாரையும் விடப்போவதில்லை. கட்சியில் களை எடுக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. தற்போதைய நடவடிக்கை ஆரம்ப கட்டம் தான். வரும் காலத்தில் களையெடுப்பது உறுதி. பாஜகவில் இன்னும் பல அதிரடி நடவடிக்கைகள் தொடரும்.

பாஜக நாகரிகமான அரசியல் செய்து வருகிறது. சூர்யா சிவா தகாத முறையில் பேசியுள்ளார். இன்று மாலைக்குள் அறிக்கை கேட்டுள்ளேன். காயத்ரி ரகுராம் விவகாரத்தில் கருத்து கூற விரும்பவில்லை. தவறு செய்தவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.


ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை பாஜக வரவேற்றது. முழுமையாக ஆதரிக்கிறது. அதிமுகவுடன் கூட்டணி தொடரும். பாஜக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறுமா என்பது தொடர்பான கேள்வியை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் தொடர்பாக பாஜக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. தமிழக பாஜக பேருந்து போல தான். பழையவர்களை இறக்கி விட்டால் தான் புதியவர்கள் ஏற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story