'நடிகர் விஜய்யின் முயற்சிகள் தமிழ்நாட்டிற்கு நல்லதாக அமையட்டும்' - வைகோ வாழ்த்து
நடிகர் விஜய்யை பின்பற்றி வரக்கூடிய ரசிகர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள் என்று வைகோ குறிப்பிட்டார்.
சென்னை,
நடிகர் விஜய் "தமிழக வெற்றி கழகம்" என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். தனது கட்சியின் பெயரை டெல்லி தேர்தல் ஆணையத்தில் அவர் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் விஜய் கட்சியின் பெயர் அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
"ஜனநாயகத்தில் அனைவருக்கும் வாக்குரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதைப் போல், யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் என்ற உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யை பின்பற்றி வரக்கூடிய ரசிகர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவரும் தமிழ்நாட்டிற்கு சில நல்ல காரியங்களை செய்து வந்துள்ளார்.
இப்போது ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளார். இது குறித்து கட்சி ஆரம்பிக்கும் சமயத்திலேயே நான் வேறு எதுவும் சொல்லக்கூடாது. அவரது முயற்சிகள் தமிழ்நாட்டிற்கு நல்லதாக அமையட்டும்."
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.