பெரியார் சிலைக்கு ம.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை


பெரியார் சிலைக்கு ம.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
x

காரைக்குடியில் நினைவு நாளையொட்டி பெரியார் சிலைக்கு ம.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி நகர ம.தி.மு.க. சார்பில் தந்தை பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள பெரியார் சிலைக்கு மாநில கலை துறை துணை செயலாளர் சிற்பி சேது தியாகராஜன் தலைமையில் மாவட்ட பொருளாளர் முத்துசாமி முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் நகர அவை தலைவர் பழனி, மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் முருகானந்தம், நகர துணை செயலாளர் வேங்கை மூர்த்தி, நகர இளைஞர் அணி அமைப்பாளர் எழுச்சி முத்து, நகர இலக்கிய அணி அமைப்பாளர் சன்னா ஆறுமுகம், நகர பொருளாளர், ஆனந்த், மாவட்ட தொழில் நுட்ப அணி அமைப்பாளர் சத்யம் சுரேஷ், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story