தனியார் நிதி நிறுவனத்தில் பணம் திருட்டு


தனியார் நிதி நிறுவனத்தில் பணம் திருட்டு
x

கள்ளக்குறிச்சி தனியார் நிதி நிறுவனத்தில் பணம் திருடப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி விநாயகா நகரில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இதில் முடியனூர் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி (வயது 21) என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் வழக்கம்போல் நிறுவனத்தை மூடிவிட்டு சென்றார். பின்னர் நேற்று காலை திரும்பி வந்து பார்த்தபோது, நிறுவன கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.35 ஆயிரத்தை காணவிவ்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் பெரியசாமி நிறுவனத்தை பூட்டிவிட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவில் நிறுவனத்துக்குள் புகுந்து பணத்தை திருடிச்சென்றது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story