Normal
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; மூதாட்டி படுகாயம்
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூதாட்டி படுகாயம் அடைந்தார்.
கரூர்
நொய்யல் அருகே குந்தாணிபாளையம் புதுக்காலனியை சேர்ந்தவர் வீரன் (வயது 68). இவரது மனைவி தங்கம்மாள் (65), கூலித்தொழிலாளி. இந்தநிலையில் தங்கம்மாள் பேட்டரியால் இயங்கும் மோட்டார் சைக்கிளில் கரூர்-நொய்யல் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது புங்கோடை குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சீரங்கன் (60) என்பவரது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக தங்கம்மாள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேராக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தங்கம்மாளை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளை மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story