சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரில் தடுமாறி விழும் வாகன ஓட்டிகள்
சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரில் வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் நிலை உள்ளதால் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவகாசி,
சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரில் வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் நிலை உள்ளதால் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திடீர் மழை
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் சத்யாநகரில் உள்ள சாட்சியாபுரம் ரோடு சீரமைப்பு பணி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. இந்த பணி தற்போது நடைபெறாத நிலையில் நேற்று முன்தினம் பெய்த திடீர் மழையால் அப்பகுதியில் தண்ணீர் குளம் போல் தேங்கியது.
இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதியை கடந்த செல்ல முயன்ற பலர் வாகனங்களில் இருந்து நிலைதடுமாறி விழுந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பல வருடங்களாக இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சாலை சீரமைப்பு பணி தொடங்கியது.
சாலை சீரமைப்பு பணி
ஆனால் பணிகள் முழு மையாக முடிவடையாத நிலையில் அங்கு தற்போது மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியை கடந்து செல்ல முயன்றவர்கள் தடுமாறி விழுந்தனர். இந்த பகுதியில் தண்ணீர் வெளியேற போதிய வசதி இல்லாத நிலையில் மாநகராட்சி நிர்வாகம் தண்ணீரை வெளிேயற்றி சாலை சீரமைப்பு பணிகளை உடனே தொடங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.