புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

கரூர்,

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே நடந்த கல்குவாரியில் விபத்தில் இறந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் கோவை ரோட்டில் உள்ள ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் சுபாஷ் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட இளைஞரணி செயலாளர் நந்தகுமார், தோைகமலை ஒன்றிய செயலாளர் செந்தில், கரூர் நகர செயலாளர் பாரதி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story