பா.ஜ.க.வுடன் எப்போதும் கூட்டணி கிடையாது - ஜெயக்குமார் திட்டவட்டம்


பா.ஜ.க.வுடன் எப்போதும் கூட்டணி கிடையாது - ஜெயக்குமார் திட்டவட்டம்
x
தினத்தந்தி 7 Feb 2024 12:21 PM IST (Updated: 7 Feb 2024 12:27 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. முன்வைத்த காலை பின் வைக்காது என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், அ.தி.மு.க. கூட்டணிக்காக பா.ஜனதா கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று உள்துறை மந்திரி அமித்ஷா 'தினத்தந்தி'க்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

அப்போது தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்றாகி விட்டது. 3-வது அணி அமைக்க திட்டமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அமித்ஷா 'கூட்டணிக்காக எல்லா கதவுகளும் திறந்தே இருக்கின்றன. இதுகுறித்து ஆலோசித்து வருகிறோம்' என்று கூறினார்.

இந்த நிலையில், கூட்டணி குறித்த உள்துறை மந்திரி அமித்ஷா கருத்துக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

கூட்டணிக்கான கதவுகளை பா.ஜ.க. திறந்து வைத்திருக்கலாம், ஆனால் அ.தி.மு.க. கதவை மூடிவிட்டது பா.ஜ.க. யாருக்கு வேண்டுமானாலும் கதவுகளை திறந்து வைத்திருக்கட்டும். தமிழ்நாட்டில் பா.ஜ.கவை யாரும் விரும்பவில்லை. பா.ஜ.க.வுடன் எப்போதும் கூட்டணி கிடையாது. பா.ஜ.க.வுடன் கூட்டணி வேண்டாம் என்பது தொண்டர்கள் மற்றும் மக்களின் நிலைப்பாடு. அ.தி.மு.க. முன்வைத்த காலை பின் வைக்காது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story