நாளை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு


நாளை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு
x

நாளை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு

தஞ்சாவூர்

வல்லம், திருவையாறு, கரந்தை பகுதிகளில் நாளை(புதன்கிழமை) மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வல்லம்

மின்நகர் துைண மின் நிலையத்தில் இருந்து வரும் உயரழுத்த மின்பாதைகளில் நாளை(புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வல்லம், சென்னம்பட்டி, மின்நகர் மற்றும் ராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் இளஞ்செல்வன் ெதரிவித்தார்.

திருவையாறு

திருவையாறு, மேலத்திருப்பூந்துருத்தி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை( புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இந்த துணைமின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் திருவையாறு, கண்டியூர், ஆவிக்கரை, செங்கமேடு, காட்டுக்கோட்டை கரூர், கீழத்திருப்பூந்துருத்தி, மேலத்திருப்பூந்துருத்தி, திருவாலம்பொழில், நடுக்காவேரி, ஆச்சனூர், வைத்தியநாதன்பேட்டை, பனையூர், கடுவெளி, தில்லைஸ்தானம், பெரும்புலியூர், புனவாசல், விளாங்குடி, வில்லியநல்லூர், செம்மங்குடி, அணைக்குடி, திருப்பழனம், திங்களூர், ராயம்பேட்டை, காருகுடி, பொன்னாவரை, கல்யாணபுரம், புதுஅக்ரஹாரம், நடுக்கடை மற்றும் திருவையாறை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை திருவையாறு உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்தார்.

மருத்துவக்கல்லூரி

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(புதன்கிழமை) நடைபெறுகிறது. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் கரந்தை, பள்ளிஅக்ரகாரம், பள்ளியேரி, திட்டை, பலோபநந்தவனம், சுங்கான்திடல், நாலுகால் மண்டபம், அரண்மனை பகுதிகள், திருவையாறு, கண்டியூர், நடுக்கடை, மேலதிருப்பூந்துருத்தி, நடுக்காவேரி, திருவாலம்பொழில், விளார், நாஞ்சிக்கோட்டை, காவேரிநகர், வங்கி ஊழியர் காலனி, இ.பி. காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

ஈச்சங்கோட்டை

ஈச்சங்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மருங்குளம், ஈச்சங்கோட்டை, நடுவூர், சூரியம்பட்டி, கொ.வல்லுண்டான்பட்டு, கொல்லங்கரை, வேங்கராயன்குடிகாடு, கோவிலூர், வடக்கூர், பொய்யுண்டார்கோட்டை, பாச்சூர், செல்லம்பட்டி, துறையூர், சூரக்கோட்டை, வாண்டையார்இருப்பு, மடிகை, காட்டூர், மேலஉளூர், கீழஉளூர், பொன்னாப்பூர் கிழக்கு, பொன்னாப்பூர் மேற்கு, ஆழிவாய்க்கால், பஞ்சநதிக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை தஞ்சை புறநகர் உதவி செயற்பொறியாளர் தெரிவித்தார்.


Next Story