பெரியாரிய உணர்வாளர்கள் சார்பில்சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம்


பெரியாரிய உணர்வாளர்கள் சார்பில்சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Feb 2023 6:45 PM GMT (Updated: 20 Feb 2023 6:46 PM GMT)

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேனி

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் தமிழரசி தலைமை தாங்கினார். திராவிடர் கழக மாவட்ட செயலாளர் மணிகண்டன், விடுதலை சிறுத்தைகள் கட்சி எழுச்சி பாசறை மாவட்ட செயலாளர் மது, தமிழ்ப்புலிகள் கட்சி மாநில பொறுப்பாளர் தலித்ராயன், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட தலைவர் ராமசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது அருந்ததியர் சமுதாயம் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக கூறியும், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதேபோல், ஆதித்தமிழர் பேரவை சார்பிலும், சீமானை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். சீமான் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். மேலும், சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் தலைமையில் நிர்வாகிகள் சிலர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.


Related Tags :
Next Story