மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக 4 பேட்டரி கார்கள் இயக்கம்


மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக 4 பேட்டரி கார்கள் இயக்கம்
x

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக 4 பேட்டரி கார்கள் இயக்கப்படுகிறது.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பன்னாட்டு முனையம், உள்நாட்டு முனையம் மற்றும் மெட்ரோ ெரயில் நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் பயணிகள் வசதிக்காக இலவசமாக பேட்டரி கார் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

இந்த பேட்டரி கார் வாகன சேவை வயதான பயணிகள், பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், நோயாளிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. முழுக்க முழுக்க பயணிகளுக்காக மட்டுமே இந்த பேட்டரி கார்கள் இலவசமாக இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்களுக்கு விமான பயணிகள் இடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் தற்போது 4 பேட்டரி கார்கள் மட்டுமே உள்ளன. ஆனால் நாளுக்கு நாள் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த பேட்டரி கார்கள் ஓய்வு இல்லாமல் இரவு, பகல் என 24 மணி நேரமும் இயக்கப்படுகின்றன. இதையடுத்து விமான பயணிகளின் வசதிக்காக கூடுதலாக மேலும் 4 புதிய பேட்டரி கார்கள் இயக்கப்படுகிறது. இதன்மூலம் தற்போது 8 பேட்டரி கார்கள் பயன்பாட்டில் உள்ளது.

இனிமேல் பயணிகளுக்கு உடனுக்குடன் பேட்டரி கார் வாகன சேவை கிடைக்கும். அவர்கள் தங்கள் உடைமைகளை டிராலிகளில் வைத்து தள்ளிக்கொண்டு சிரமப்பட்டு செல்லாமல் பேட்டரி காரில் இலவசமாக பயணம் செய்யலாம் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story