நெல் சாகுபடி பயிற்சி முகாம்


நெல் சாகுபடி பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 20 Feb 2023 12:15 AM IST (Updated: 20 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கொங்கராயபாளையத்தில் நெல் சாகுபடி பயிற்சி முகாம்

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நீர் நுட்ப மையம் மற்றும் விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையம் ஆகியவை சார்பில் மணிமுக்தா ஆற்றுப்பகுதியில் உள்ள உபவடிகால் பகுதியில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்துதல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி கொங்கராயபாளையம் ஊராட்சியில் நெற்பயிர் சாகுபடி தொழில்நுட்பம் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கு விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி முனைவர் இந்திராணி தலைமை தாங்கி நெல் பயிர் ரகங்கள், கலை மேலாண்மை மற்றும் பூச்சி மேலாண்மை குறித்தும், நெற்பயிரை தாக்கும் பூச்சிகள், நோய்கள் மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கமாக கூறினார். ஊராட்சி மன்ற தலைவர் ராஜா முன்னிலை வகித்தார். தொழில்நுட்ப உதவியாளர் சன்னியாசி, ஊராட்சி செயலாளர் கணேசன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story