Normal
பரமேஸ்வரன்- பார்வதி திருக்கல்யாணம்
குத்தலஅள்ளி கிராமத்தில் பரமேஸ்வரன்- பார்வதி திருக்கல்யாணம் நடந்தது.
தர்மபுரி
பாலக்கோடு:
குத்தலஅள்ளி கிராமத்தில் பரமேஸ்வரன்- பார்வதி திருக்கல்யாணம் நடந்தது.
பாலக்கோடு அருகே குத்தலஅள்ளி கிராமத்தில் பரமேஸ்வரன் பார்வதி சமேத திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. மேளதாளங்கள், பூரண கும்ப மரியாதையுடன் சிவபெருமானை வரவேற்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமியும், அம்பாளும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஒரே பந்தலில் எழுந்தருளினர். பின்னர் திருக்கல்யாணம் நடந்தது. சுவாமிக்கு மணமகன் - மணமகள் வீட்டார் சார்பில் மொய் எழுதும் நிகழ்ச்சி நடந்தது. சுவாமி தேர் வீதி உலா நடந்தது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story