நாடாளுமன்ற தேர்தல்: தாம்பரம்-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில் இயக்கம்


நாடாளுமன்ற தேர்தல்: தாம்பரம்-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
x

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தாம்பரம்-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நாளை மறுநாள் (19-ந் தேதி) நடப்பதையொட்டி பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக சென்னையில் இருந்து கன்னியாகுமரி, சென்னையில் இருந்து திண்டுக்கல் வழியாக கோவைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி தாம்பரம் - கன்னியாகுமரி சிறப்பு ரெயில் (வ.எண்.06001) ஏப்ரல் 18 மற்றும் 20 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.40 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும். மறு மார்க்கத்தில் கன்னியாகுமரி - தாம்பரம் சிறப்பு ரெயில் (வ.எண்.06002) ஏப்ரல் 19 மற்றும் 21 ஆகிய நாட்களில் கன்னியாகுமரியில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

இந்த ரெயில் நாகர்கோவில், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.


Next Story